பொதுவாக ஆண்டிறுதி என்றால் இயற்கைதான் அட்டூழியம் செய்யும். அதை இந்த முறை தேர்தல் ஆணையம் செய்துவிட்டது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பன்னிரண்டு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நவம்பர் 4ஆம் தேதியன்று வாக்காளர் சிறப்புத் தீவிரச் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள ஏறக்குறைய 99.5% வாக்காளர்களுக்குச் சரிபார்ப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
படிவங்களை நிரப்பிப் பதிவேற்றும் முதல்கட்டப் பணிகளை முடிக்க ஒரு மாத கால இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் ஈடுபடுத்தப்பட்ட அந்தந்த மாநில அரசு அலுவலர்கள் பணிச்சுமையைக் காரணம் காட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் இத்தனை குறுகிய காலக்கெடுவை விமர்சித்தன. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் மீதமிருந்த பணிகளுக்கேற்பப் படிவங்கள் சேகரிப்புக்கான கால அவகாசத்தை நீட்டித்தது தேர்தல் ஆணையம்.















Add Comment