Home » இனியேனும் திரும்புமா அமைதி?
நம் குரல்

இனியேனும் திரும்புமா அமைதி?

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான சமாதான ஒப்பந்தங்களும், போர் தொடங்கிய நான்கு நாள்களில் ஆரம்பித்த பேச்சுவார்த்தையும் நான்கு வருடங்களாகியும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்கோஃப்பின் உதவியுடன் இப்போது வெளியாகியிருக்கும் சமாதான ஒப்பந்தம் புதிய நம்பிக்கையைத் தருகிறது. இரு நாடுகளின் நிலைப்பாட்டையும் கேட்டறிந்தபின் ரஷ்ய நடையிலேயே இந்த ஒப்பந்தம் தயாராகி இருப்பதனால் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஒப்பந்தத்தின் தற்போதைய இருபது அம்சங்களில் பெரும்பான்மையானவற்றை இருதரப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன. உக்ரைனின் இறையாண்மை காக்கப்படும், ஐரோப்பாவின் எந்தப் பகுதி மீதும் இனி ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்யாது. பதிலுக்கு உக்ரைன் தனது நேட்டோ ஆசையைத் துறந்துவிட வேண்டும். உக்ரைன் அதிபரும் நிலைமையைப் புரிந்து இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். நேட்டோவுக்கு ஈடான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் வழங்க வேண்டும் என்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!