சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை மழை என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் வேறு சிந்தனையே இல்லாமல் அதைக் குறித்து மட்டுமே பேசுவது சென்னை மக்களின் பழக்கம்.
அப்படி ஆண்டுக்கொரு முறை வருகிற மழையும் அதிகம் போனால் ஒன்றிரண்டு தினங்கள் நின்று அடிக்கும். உலக சாதனை என்றால் நான்கைந்து தினங்கள். இந்தச் சிறிய கால அவகாசத்தை நிதானமாகக் கடக்கும் மனநிலையை எப்போது நாம் இழக்கத் தொடங்கினோம்?
மழை பெய்யத் தொடங்கியதுமே சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது என்று ஆரம்பித்துவிடுகிறோம். ஐயோ மின்சாரம் போய்விட்டது என்று அலறுகிறோம். பால் வரவில்லை, பேப்பர் வரவில்லை என்பதெல்லாம் ஸ்டேடஸ் கண்டெண்டுகளாகின்றன.
Add Comment