டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு, இந்த மார்ச் 24-ல் நூற்றாண்டு ஆரம்பம்.
சினிமாவில் இவர் பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’. 1950-ஆம் ஆண்டு, ‘கிருஷ்ண விஜயம்’ என்னும் படத்திற்காக, எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் பாடிய பாடல் அது. கடைசியாகப் பாடிய பாடல், ‘பாட்டொன்றுகேட்டால் பாராட்டும் உலகம்.’ இது, ‘சூரியா’ என்னும் பெயரில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட படத்தின் பாடல். தொண்ணூறு வயதை எட்டும் நிலையில், இவர் தனது கடைசிப் பாடலையும் பாடி முடித்த பிறகுதான் இவருக்கு ‘பத்மஶ்ரீ’ விருதே கிடைத்தது என்பதுதான் நம்ப முடியாத ஆச்சரியம்.
Add Comment