Home » பிள்ளை வளர்க்கும் கலை: அசத்தும் நாமக்கல் பள்ளிக்கூடம்!
கல்வி

பிள்ளை வளர்க்கும் கலை: அசத்தும் நாமக்கல் பள்ளிக்கூடம்!

நண்பன் திரைப்படத்தில் வரும் கொசக்சி பசப்புகழின் பள்ளிக்கூடம்  போன்ற ஒரு பள்ளி உண்மையில் செயல்பட்டு வருகிறது. அதுவும் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில்.

அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவிலேயே பிற மாநிலங்களில் இருந்தும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்  நாமக்கல்லில் இருக்கும் வேதலோக வித்யாலயா பள்ளிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். வரும்காலத்தில் தாங்கள் கொண்டுவரவேண்டும் என நினைத்திருந்த திட்டங்கள், கடந்த மூன்று வருடங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருவதை நேரில் பார்க்கவும், ஆலோசனைகளைப் பெறவும் அவர்கள் வந்து செல்கின்றனர்.

இப்பள்ளி தொடங்கப்பட்டு இருபத்தெட்டு வருடங்கள் ஆகின்றன. கடந்த மூன்று வருடங்களாக சிபிஎஸ்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பள்ளியின் பாடத்திட்டத்தைப் பற்றியும், அதற்கு மாணவர்களின் வரவேற்பைப் பற்றியும் சேர்மன் சாதனா நம்மிடம் பேசினார்.

1997 ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் பள்ளியாக என் பெற்றோர் இதனைத் தொடங்கினர். பிள்ளைகளுக்கு முழுமையான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிலேயே 38 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளிதான் இன்று இந்த நிலையில் வளர்ந்துள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!