Home » நாராயண குருவும் நதிக்கரை ‘நாகரிகமும்’
ஆளுமை

நாராயண குருவும் நதிக்கரை ‘நாகரிகமும்’

நாராயண குரு

இந்திய மறுமலர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய நாராயணகுருவின் 169வது பிறந்த நாள் ஆகஸ்ட் 20ஆம் தேதி, ஸ்ரீ நாராயண ஜெயந்தியாக கேரளாவில் கொண்டாடப்படுகிறது. சாதியொழிப்பு, ஏழைகளின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக நாராயணகுரு அரும்பாடுபட்டவர். எல்லா உயிர்களும் ஒன்றே என்பதைப் பறைசாற்றும் அத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடித்தவர். தர்சன மாலா, ஆத்மோபதேச சதகம் போன்ற முக்கியமான தத்துவ நூல்களை இயற்றியுள்ளார். கேரளாவின் அறிவியக்கத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த நாராயணகுருவின் வாழ்க்கைப் பாதையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருவனந்தபுரத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது செம்பழந்தி கிராமம். சாதிப் படிநிலையும் தீண்டாமையும் கேரளத்தில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த காலகட்டம். அன்றைய கேரளா என்னும் திருவிதாங்கூர், எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் உயர்குடி நாயர் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அவற்றில் ஒன்றான செம்பழந்தி பிள்ளைமார் குடும்பம், செம்பழந்தி கிராமத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்தனர்.

அச்சிறுகிராமத்தில் நாயர்கள், ஈழவர்கள் மற்றும் புலையர் சாதியைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். அவர்களில் ஈழவர்களும் புலையர்களும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களின் நிழல் பட்டால் கூட தீட்டாகிவிடும் என்று உயர் சாதியினரால் ஒதுக்கிவைக்கப்பட்டனர். அத்தகைய சூழலில் நாராயணகுரு 1856 ஆகஸ்ட் 20 அன்று, தீண்டத்தகாதவர்கள் என்று புறக்கணிக்கப்பட்ட ஈழவர் சமுதாயத்தில் பிறந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!