புதிய பிரிட்டிஷ் பிரதமராக லிஸ் டிரஸ் பதவி ஏற்ற இரண்டாவது நாளே எலிசபெத் ராணி பரலோகம் போய் விட்டார். உலகமே அதிர்ச்சி அடைந்தது. என் பாட்டி உயிரோடு இருந்திருந்தால் இவள் வந்த ராசி ராணி போயிட்டா என்று சொல்லியிருப்பார். நான் அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். இது ஒரு இயற்கையான சம்பவம். புதிய பிரதமரின் வருகைக்கும் ராணியின் மறைவுக்குமான தொடர்பு காக்கை இருக்கப் பனம் பழம் விழுந்த கதை போன்றது தான். இரண்டு வாரம் நாடு முழுவதும் சோகமயம். யாரும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி ராணியை அடக்கம் செய்யும் வரை அக்கறை செலுத்தவில்லை.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment