புதிய பிரிட்டிஷ் பிரதமராக லிஸ் டிரஸ் பதவி ஏற்ற இரண்டாவது நாளே எலிசபெத் ராணி பரலோகம் போய் விட்டார். உலகமே அதிர்ச்சி அடைந்தது. என் பாட்டி உயிரோடு இருந்திருந்தால் இவள் வந்த ராசி ராணி போயிட்டா என்று சொல்லியிருப்பார். நான் அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். இது ஒரு இயற்கையான சம்பவம். புதிய பிரதமரின் வருகைக்கும் ராணியின் மறைவுக்குமான தொடர்பு காக்கை இருக்கப் பனம் பழம் விழுந்த கதை போன்றது தான். இரண்டு வாரம் நாடு முழுவதும் சோகமயம். யாரும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி ராணியை அடக்கம் செய்யும் வரை அக்கறை செலுத்தவில்லை.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















Add Comment