நிலவில் ஒரு குகை இருப்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்தக் குகை தரைமட்டத்திலிருந்து கீழ் நோக்கி நூறு மீட்டர் அளவு ஆழம் உள்ளதாக இருக்கும். மனிதர்கள் தங்குவதற்கு ஏற்றதாக அந்தக் குகை இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். நிலவின் தரைப்பரப்புக்கு அடியில் இதுபோல இன்னும் பல குகைகள் இருக்க வாய்ப்புள்ளது எனவும் கணித்திருக்கின்றனர்.
செய்தி நிறுவனமான பி.டி.ஐ.யின் (PTI) அறிக்கையின்படி, 2011-ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவில் ஒரு மாபெரும் நிலத்தடி அறையை கண்டுபிடித்துள்ளனர். ‘இது விண்வெளி வீரர்களால் கிரகங்களுக்கு இடையிலான பயணங்களுக்குத் தளமாக பயன்படுத்தப்படலாம்.’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்திருக்கிறார்கள். நிலவில் குகைகள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்திருக்கிறார்கள்.
‘நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகையில் மனிதர்கள் இருபது முதல் முப்பது ஆண்டுகள் வாழ சாத்தியங்கள் உள்ளன” என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். நிலவில் அதிகமாக உள்ள, மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காஸ்மிக் கதிர்வீச்சு மற்றும் சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இதனால் நீண்ட நாள்கள் விண்வெளி வீரர்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடலாம். மலையேறுபவர்கள் போலக் குகையில் கயிறு கட்டி இறங்கலாம். அந்தக் குகையிலிருந்து வெளியேற ஜெட் பேக் உபயோகிக்கலாம்.’ என்று விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட முதல் விண்வெளி வீரர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹெலன் ஷர்மன் தெரிவித்துள்ளார்.
Add Comment