Home » நைல் நதி அநாகரிகம் – 7
தொடரும் நைல் நதி அநாகரிகம்

நைல் நதி அநாகரிகம் – 7

குளிர் நீரும் குடி நீரும்

கிழக்கு ஆப்பிரிக்காவில் கிரின்யகா மலையோரம் இருக்கும் நாடு, கென்யா. கிரின்யகா என்றால் பளீரிடும் மலை என்று பொருள். பனி உறைவிடமான சிகரம் கொண்ட மலை. கென்யாவின் தலைநகர் நெய்ரோபி, நெய்ரோபி என்றால் குளிர்நீரின் உறைவிடம். அப்படிப் பட்ட கென்யாவில் தான் தீராத தாகம்.

கென்யா பல தலைமுறைகளாகப் பிரித்தானிய காலனியாக இருந்தது. நைல் நதியின் நீரை நம்பி விவசாயம் செய்து வந்த கென்யாவையும் ஏமாற்றியது பிரிட்டன். எத்தியோப்பியாவைப் போலவே. சூடானுக்கும் எகிப்திற்கும் மட்டுமே 85% நைல் நீரை பயன்படுத்த உரிமையை அளிக்க நதிநீர் ஒப்பந்தம் கையொப்பமானது. பின்வரும் ஆண்டுகளில் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்தனர்.

1963இல் சுதந்திரம் அடைந்தது கென்யா. 40 இலட்ச மக்களில் 50 சதவீதம் பேர் குடி நீருக்காக அலைந்து திரியும் நிலைதான். நகரப்புற மக்களுக்குச் சுத்தமான நீருக்கான தட்டுப்பாடு மட்டும்தான். ஆனால், கிராமப் புற மக்களுக்குத் தண்ணீரே இல்லை.

மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான காகமேகா மருத்துவமனையில் நோயாளிகளின் தேவைகளுக்காக வாளிகளில் நீர் முகர்ந்து கொண்டுவருகிறார்கள். அதுவும் சுத்தம் செய்யப்படாத நீர். ஏற்கெனவே நோயாளி, இதில் அசுத்த நீரைப் பயன்படுத்தினால் என்ன ஆகும்? ஆனால் வேறு வழி?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!