Home » யார் இந்த நிதின் நபின்?
இந்தியா

யார் இந்த நிதின் நபின்?

நிதின் நபின்

டெல்லியில் தங்கிப் படித்தபோது, ஸ்லாம் புத்தகத்தில் ‘அரசியலில் சேர்ந்தால் என் வாழ்கை மிக மோசமாக இருக்கும்’ என்று ஒருமுறை எழுதியிருந்தார் நிதின் நபின். அவரது தந்தை நபின் கிஷோர் பிரசாத்தும் அவர் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமாக இருந்தது. நபின் அரசியலில் நுழைந்தது மட்டுமல்லாமல், தனது நாற்பத்தைந்தாவது வயதிலேயே பாஜகவின் தேசியச் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேபி நட்டாவுக்கு அடுத்து நிதின் நபின் தேசிய பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது கட்சியினருக்கு மட்டுமில்லாமல் அவருக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் அவரது மனைவி தீப்மாலா ஸ்ரீவஸ்தவா நான்கு நாள் சத் விரதம் அனுசரித்துக் கொண்டிருந்தார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது வீட்டுக்கு வந்து பிரசாதம் வாங்கிச் சென்றார். பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருந்ததால் அமித் ஷாவின் வருகையில் இருந்த மறைமுகமான இந்த அரசியல் செய்தியை யாரும் உணரவில்லை. அதன் பிறகு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • krishnamoorthy m says:

    INC president age is 82+ whereas BJP president age is 45+ this shows the direction of both parties… INC the oldest grand party should learn (not the bad one’s) from BJP to keep the party vibrant…

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!