Home » நீலமலை ரகசியம் – 8
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 8

8. வழித்துணை

அவர் பெயர் ஜான் பாப்டிஸ்ட் லூயி டெலா டூ. ( Jean-Baptiste Leschenault de La Tour). சுருக்கமாக ஜான் பாப்டிஸ்ட். பதினெட்டாம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான தாவரவியலாளர், பறவையின ஆய்வாளர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். ஆஸ்திரியா எனும் நாடு கண்டறியப்பட்டபோது அங்கு மண்ணின் இயல்பைப் பரிசோதித்து, அங்கு வளரக்கூடிய தாவரங்களைப் பட்டியலிட்டு, அதன் இயற்கை எழிலுக்கு அடித்தளமிட்டவர். புதுச்சேரியின் தாவரவியல் பூங்காவை வடிவமைத்தவர் இவரே. இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளிலும் இதே போன்று தாவரங்கள், பறவைகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவருக்குச் சற்று உடல்நலம் குன்றி ஓய்வுக்காக பாரீஸில் முகாமிட்டிருந்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் இவரை இந்தியாவில் தாவரவியல் ஆய்வுகளை மேற்கொள்ள அழைத்திருந்தது. ஃபிரெஞ்ச் அரசாங்கத்தோடு இணைந்து பிரிட்டிஷ் மேற்கொண்டிருந்த தாவரவியல் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப்போகும் முயற்சியாக அந்தத் திட்டம் அமைந்திருந்தது. அடிப்படையிலேயே தாவரங்கள் மீதான ஆர்வம் கொண்டவரான ஜான் சல்லிவனுக்கும், ஜான் பாப்டிஸ்ட்டுக்கும் சிறு வயதிலிருந்தே கடிதரீதியான தொடர்புகள் இருந்தன. இருவரும் மனமொத்த நண்பர்களாக மாறியிருந்தனர். இந்தியாவிற்கு வரப்போகிறோம் என்று தெரிந்தவுடனேயே ஜான் பாப்டிஸ்ட் ஒரு விரிவான கடிதத்தை ஜான் சல்லிவனுக்கு எழுதியிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!