08 – அரசாங்கம் தெரிந்த அரசியல்வாதி
மே,1990
அதிபராவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்னால் தொடங்கியது புதினின் அரசியல் வாழ்க்கை. செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் மேயராக அவரது பல்கலைக்கழகப் பேராசிரியர் அனதோலி சப்ஜக் பதவியேற்றிருந்தார். சோவியத்தின் உளவுத்துறையோடு அவருக்கு நல்லுறவு இல்லை. இதைச் சரிப்படுத்தவும், அவருக்கு நம்பிக்கைக்குரியவராக இருக்கவும் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் துணை இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் புதின். உளவுத்துறையான KGBஇன் பரிந்துரையின்படியே இப்பொறுப்பை ஏற்றிருந்தார். ஏற்கெனவே அனதோலி சப்ஜக்கின் மாணவராக இருந்ததால், துணை மேயர் பதவிக்குச் சரியாகப் பொருந்தினார் புதின்.
ஐந்து மில்லியன் மக்களோடு மாஸ்கோவுக்கு அடுத்த பெரிய நகரமாக விளங்கியது செயின்ட் பீட்டர்ஸ்பர்க். கல்லூரியில் ஆசிரியராக வழிகாட்டிய அனதோலி சப்ஜக், புதினின் அரசியல் வாழ்வுக்கும் வழிகாட்டினார். மேயர் பதவிக்குப் போட்டியிடும் காலத்திலிருந்தே புதின் அவருடன் இணைந்திருந்தார். ஒரு சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் வென்று மேயராகும் பயணம் அவருக்கு முழு அரசியல் வாழ்வைக் கற்றுத்தந்தது. பாலபாடத்திலிருந்து அரசியல் ராஜதந்திரங்கள் வரை சோதித்துப் பார்க்க வாய்ப்பளித்தது. ஒரு ஆட்சியாளராகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் உத்திகளை நேரடி அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்டார் புதின்.















Add Comment