Home » நீலமலை ரகசியம் – 30
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 30

புனல் மின்சாரம்

1920களில் கோவையிலும் சென்னையிலும் பருத்தி மற்றும் நெசவு ஆலைகள் பெரிதாக வளர்ந்து வந்தன. கோயம்புத்தூர் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ ஆக உருவெடுக்கத் தொடங்கிய காலம் இது. ஸ்டேன்ஸ் மில் (Stanes Mill) போன்ற பல ஆலைகள் தொடங்கப்பட்டன. அந்தக் காலத்தில் அங்கிருந்த இயந்திரங்கள் அனைத்துமே நீராவியால் இயங்கின, அதனால் அதிகச் செலவு பிடித்தன. சென்னையிலும் பக்கிங்ஹாம் மற்றும் கர்னாடிக் மில்ஸ் (B&C Mills)ஆலை உற்பத்தியைத் தொடங்கியது. இதற்கும் பெரிய அளவில் மின்சாரம் தேவைப்பட்டது.

இதைப்போலவே, ரயில் பெட்டித் தொழிற்சாலைகள் விரிவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் மின்சாரமே அத்தியாவசியம் என்று தெரியவந்தது. வளர்ந்து கொண்டிருந்த நீலகிரி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியிலும் மின்சாரத் தேவையால் ஒரு தேக்கம் இருந்தது. தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு மின்தேவை அதிகம் இருந்தது. இவை தவிர, சென்னை போன்ற நகரங்களில் தெருவிளக்குகள் மற்றும் டிராம் (Tram) வண்டிகளை இயக்கவும் மின்சாரம் தேவைப்பட்டது.

இந்தத் தொழில்கள் யாவும் தொடக்கத்தில் நிலக்கரி மூலமாகப் பெறப்படும் நீராவியைப் பயன்படுத்தின. இதில் மூன்று முக்கியச் சிக்கல்கள் இருந்தன மெட்ராஸுக்கு நிலக்கரி பெரும்பாலும் வங்காளம் அல்லது வெளிநாடுகளிலிருந்து கப்பல் வழியாக வர வேண்டும். இது மிகுந்த செலவு மிக்கதாக இருந்தது. நீராவி இயந்திரங்களை விட மின்சார மோட்டார்கள் சீரான வேகத்தையும் அதிக உற்பத்தியையும் கொடுத்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!