Home » என்.டி.ஆர் -100: நடிகரல்ல; தேவுடு!
ஆளுமை

என்.டி.ஆர் -100: நடிகரல்ல; தேவுடு!

300 படங்கள், வித விதமான பாத்திரங்கள்.  இருபது ஆண்டுகால கலைப் பயணம்! இருந்தாலும் ராமராகவும் கிருஷ்ணராகவுமே அதிகம் அறியப்பட்ட நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது ராமராவ் தான். ஆந்திர மக்கள் மட்டுமல்லாது தமிழக ரசிகர்களும் அந்த அளவு அவரைக் கொண்டாடினார்கள். அவரின் உருவத்திற்குக் கற்பூர ஆரத்தி எடுத்தல், மாலை போடுதல், மலர்த் தூவுதல் எல்லாம் ஐம்பது வருடங்களுக்கு முன்பே செய்து இருக்கிறார்கள். ஆந்திர மக்களைப் பொறுத்தவரை அவர் நடிகரல்ல… தேவுடு! என்.டி.ஆருக்கு இது நூற்றாண்டு.

1923 மே மாதம் 28 ஆம் தேதி கிருஷ்ணா (பாருங்கள் பிறந்த மாவட்டத்தின் பெயரை ) மாவட்டத்தில் பிறந்த அவர் எந்த விதமான அரசியல் பின்புலமோ, பணபலமோ இல்லாத ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்.. தந்தையின் பெயர் நந்தமூரி லக்ஷ்மய்யா. அம்மா வேங்கட ராமம்மா. ஒரு அரசு வேலையில் இருந்த ராமராவ் தனது 20 ஆவது வயதில் பசவதாரகம் என்ற பெண்ணை சினிமாவிற்கு வருவதற்கு முன்பே மணந்து கொண்டார்.

கலை மற்றும் சினிமாத் தாகம் அவரை வேலையை விட்டுவிட்டு வாய்ப்பு தேடத் துரத்தியது. திருமணமான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு மன தேசம் (இந்தத் தலைப்பு தான் பின்னர் அவர் கட்சி ஆரம்பிக்கும் பொது தெலுகு தேசம் ஆனது போல). ஒரே படத்தில் உச்சத்திற்குச் செல்வது படத்தில் மட்டுமே. அதற்கு இவரும் விதிவிலக்கல்ல. முதல் படத்தில் சிறப்பு தோற்றம். அடுத்த படத்தில் கதாநாயகன் என்று முயன்று கொண்டிருந்தவருக்கு வந்தது பாதாள பைரவி (1951). இந்தப் படத்தின் வெற்றி அவரை மிக முக்கியமான ஒரு ஹீரோவாக மாற்றியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரின் படங்கள் தொடர்ச்சியாக வெற்றிபெறத் துவங்கின. தோல்விகளும் அவரை விடவில்லை. ஆனாலும் மிஸ்ஸம்மா, மாயா பஜார், லவகுசா, பெல்லி சூசி நோடு, அடவி ராமுடு, ராமுடு பீமுடு எனத் தொடர் ஹிட்களால் அசைக்க முடியாத சக்தியானார் என் டி ஆர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!