104 ஆண்களும் பெண்களும்
‘எனக்கு இது வேண்டாம்னு ப்ரெக்னெண்ட்டா இருந்தப்ப ஒரு நாள் கோவத்துல வயத்துல குத்திண்டேன். அதைக் கதையா எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்.’
‘அடுத்த வாரமே பிரசுரிச்சுட்டு இருப்பானே. அல்வா கெடைச்சா மாதிரி’
‘அடுத்த வாரமே இல்லே டூ வீக்ஸ்ல பப்ளிஷ் ஆச்சு’
‘பத்திரிகைக்காரனுங்களுக்குப் பரபரப்பா எதாச்சும் வேணும். செக்ஸா இருந்தா பெட்டர். செக்ஸை எழுதறது பொம்பளைப் பேர்ல இருந்தா நல்லது. பொண்ணாவே இருந்துட்டா ரொம்ப நல்லது.’
‘நான் ஜெனியுனா நெனச்சதைத்தான் எழுதினேன். அம்பை கூடப் பாராட்டினாங்க’
‘அது சரி நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதைப் பத்தி அவங்க எங்கிட்ட சொன்னதை உங்கிட்ட சொன்னாங்களா’
‘என்னன்னு…’
‘இவளுக்கும் அவனுக்கும் கல்யாணம்னு கேள்விப்பட்டதும் சொன்னவங்ககிட்ட கேட்டேன். அவன் என்ன, முற்போக்கு பெண் விடுதலைனு பேசிண்டு திரியறான். இவ்ளோ சின்ன பொண்ணுக்கு இப்ப எதுக்குக் கல்யாணம். என்ன அவசரம்னு கேட்டேன். அம்மா போய்ட்டா வீட்டைப் பத்துக்கவும் ஒத்தாசையா இருக்கும்னான்னு சொன்னாங்க. வீட்டைப் பாத்துக்க ஆள் வேணும்னா வேலைக்காரியை வெச்சுக்க வேண்டியதுதானே. அதுக்கு ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்னேன்.’
‘எங்கிட்டையும் சொன்னாங்க’ என்றாள் தலை குனிந்து வெட்கத்துடன் சிரித்தபடி.
Add Comment