Home » ஆபீஸ் – 105
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 105

105 அரசியலும் இலக்கியமும்

நமக்கு என்ன தெரியும் என்று அவ்வப்போது உள்ளூர தோன்றினாலும் சிறுவயது முதலே எழுதுகிறான் என்கிற ஒன்றே இவனுக்கு எல்லாம் தெரியும் தோற்றத்தையோ அல்லது இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு தெரிகிறது என்கிற வியப்பையோ பார்க்கிறவர்களிடம் உண்டாக்கியிருந்தது.

அதை முதல் முதலில் வார்த்தைகளில் சொல்லி வாமனன் போல் இருக்கிற இவன் உயரத்தை உள்ளூரக் கூட்டிவிட்டவர், பாண்டிச்சேரி 54 C முத்துமாரியம்மன் கோவில் தெருவில் இவர்கள் இருந்த வீட்டின் மேல் மாடியில் வசித்த ஐஸ் ஆண்ட்டியின் கணவரான, இந்தியன் வங்கி ஏஜெண்ட்டாக இருந்த, கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக, லீவ் போட்டுவிட்டு மெட்ராஸ் பேங்களூர் என்று நேரிலேயே போய் பார்த்துவிட்டு வருகிற குமாரசாமி ரெட்டியார் அங்கிள்தான்.

மேல்வரியை நீளமாகவும் கீழ்வரியைச் சின்னதாகவும் – பல சமயங்களில் மேல் வரியைவிடக் கீழ் வரி நீளமாகிவிடும். அப்போதெல்லாம் கீழ்வரியை நுணுக்கி எழுதி சிறிதாக்கிவிடுவான் – தெருக்குறள் என்கிற பெயரில் இவன் எழுதிக் காட்டியவற்றையெல்லாம் பாராட்டிக்கொண்டிருப்பார். அவருக்கு அவ்வப்போது முதுகுவலி வரும். சரியான குண்டு என்பதால் அவருடைய அகன்ற முதுகில் ஆயின்மெண்ட் தேய்த்துவிடுவான். அவர் பாட்டுக்கும் இந்து பேப்பர் படித்தபடி உம் கொட்டிக்கொண்டிருக்க இவன்பாட்டுக்கும் எதையாவது பேசிக்கொண்டிருப்பான். அப்பாவுக்கு இல்லாத காது அவருக்கு இருந்ததுதான் ஐஸ்பெட்டிக்கு அடுத்தபடியாக அந்த வீட்டில் அவனுக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. இண்டியன் பாங்க் அங்கிளுக்கும் ஐஸ் ஆண்ட்டிக்கும் இவனைப் பிடித்திருந்ததற்கு, சூட்டிகையான பையன் என்பதைத்தாண்டி, அவர்கள் வீட்டுக் கட்டிலில் கைகல்களை உதைத்துக்கொண்டு வினோத ஒலிகளை எழுப்பியபடி படுத்தே கிடக்கும் இவன் வயதொத்த அவர்களது பெண்குழந்தையும் ஒரு காரணமாக இருக்கவேண்டும். அது இவனுக்கு இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் பிடிபட்டது. நம்மைப் பிடித்தவர்களைத்தான்  நமக்கும் பிடிக்கும் என்கிற உலக நடைமுறைப்படி அவர்கள் இருவரையும் இவனுக்குப் பிடித்திருந்தது அவர்கள் வீட்டு ஐஸ் பெட்டியையும் தாண்டி. அவர் விஸ்கி குடிக்கும்போது போட்டுக்கொள்ள மேற்புறமிருந்த ஐஸ் கட்டிகளும் இவன் அந்த வீட்டுக்குப் போனால் ஐஸ்வாட்டர் குடிப்பதற்காகவே கீழ்ப்புறக் கதவில் இருந்த, அவர் குடித்து காலி பண்னிய கலர்கலரான பாட்டில்களும் இருந்தன. அந்த வீட்டில் அவரைத் தவிர யாருமே ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தாததைப்போல இவனைத்தவிர ஐஸ் தண்ணியைக் குடிக்கவும் அங்கு யாருமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!