Home » ஆபீஸ் – 118
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 118

118 கோடைகாலக் குறிப்புகள்

தன் தொகுப்பை வெளியிட்ட அனுபவத்தில் அடுத்த வருடமே தருமுவின் கட்டுரையைப் புத்தகமாகக் கொண்டுவந்ததில் நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையோடு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தவன் பேச்சோடு பேச்சாக ஒருநாள் சுகுமாரனிடம் கேட்டான்.

நீ எப்பலேந்து கவிதை எழுதறே’

ஸ்கூல்ல இருந்தே எழுதறேன். ஏன் கேக்கறே’

அட நான் கூடதான் அஞ்சாங்கிளாஸ்ல பாரதியார் வேஷம் போட்டதுலேந்தே என்னை எழுத்தாளனா நெனச்சிக்கிட்டு இருக்கேன். அதெல்லாம் ஒரு மேட்டரா. தொகுப்பா கொண்டார அளவுக்கு உங்கிட்டக் கவிதைகள் இருக்குமா.’

என்ன திடீர்னு கேக்கறே.’

தோணிச்சு கேட்டேன்.’

கவிதைகள்லாம் இருக்கு. காசுக்கு எங்க போறது.’

முடிஞ்சவரை டிரை பண்ணு. மீதிய பாத்துக்கலாம்.’

ஜவுளி கம்பெனிக்குப் பிரதிநிதியாக இருந்த சுகுமாரன் அடுத்தச் சுற்றில் மெட்ராஸுக்கு வருவதற்குமுன் கவிதைகள் வந்து சேர்ந்தன. அரிசியை ஒன்றோடொன்று ஒட்டாமல் வரிசையாக அடுக்கியதைப் போன்ற எழுத்துகள்.என்ன ஒன்று, எல்லாம் கோடுபோட்ட நோட்புக் தாள்களில் எழுதப்பட்டிருந்தன. இவனது தொகுப்பிற்கு இவன் எதிரிலேயே பிரதியெடுத்து எழுதிக்கொண்டிருந்த கட்டுரையைப் பார்த்தபோதே அந்த எழுத்துகள் ஈர்த்தாலும் கோடுபோட்ட நோட்டில் நேராக எழுதுவதில் என்ன இருக்கிறது என்று தோன்றியது.

இவன் எப்போதுமே ப்ளெய்ன் பேப்பரில் இரண்டு இஞ்ச்சுகளுக்கு இடதுபக்கம் மாரிஜினாக மடித்து இடம்விட்டே எழுதுவான். எவ்வளவு வேகமாக எழுதினாலும் இடமிருந்து வலமாகத் துணி காயப்போடும் கொடி கட்டியதைப்போல வரிகள் ஏறாமல் இறங்காமல் இருக்கும். வேகமாக எழுதுகையில், இங்கிலீஷைப்போல கோழிகிறுக்கலாக இல்லாவிட்டாலும் எழுத்துகள் கொஞ்சம் கிறுக்கலாகத்தான் இருக்கும். ஆனால் படியெடுக்கப் படியெடுக்க கதை மெருகேறிக்கொண்டிருக்கக் கையெழுத்தில் வளைவுகளும் சுழிப்புகளும் அலங்காரமாகிக் கொண்டே போகும். கருப்பு மை போட்ட பேனாவில் எழுதுவதால் அச்சு போல கண்ணைப் பறிக்கும்படி இருக்கும். சுகுமாரன் நீல மை. அதுவும் பால்பென். பால் பென் பட்டையடிக்காது என்பதால் இவனுக்கு பால் பாய்ண்ட் பென்னே பிடிக்காது. இவனுக்கு பட்டையும் அடிக்கவேண்டும் வழுக்கிக்கொண்டும் போகவேண்டும். தன்னுடைய குண்டு பேனா தடியான சாணி நிற சொரசொரப்பான தாளிலும் வழுக்கிக்கொண்டு போகும்படி, சிமெண்ட்டுத் தரையில் சிமெண்டு குழைந்து வழவழப்புத் திட்டாக நிற்கும் இடமாகப் பார்த்துக் கீழுதட்டைக் கடித்தபடி நிப்பின் முனையை எல்லாபுறமுமாகத் தேய்த்தும் எழுதிய கதையைத் திரும்பத் திரும்ப காப்பி பண்ணி எழுதிக்கொண்டிருப்பதன் மூலமாகவும் நன்றாகப் பட்டையடிக்க வைத்துவிடுவான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்