107. நேருவின் ராஜினாமா
பிரதமர் நேரு – காங்கிரஸ் தலைவர் டாண்டன் இடையிலான உரசலின் ஓரங்கமாக டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியபோது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் ஜனநாயக முன்னணி சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால், சில காலம் முன்பாக மே.வங்காளத்தில் அதிருப்தியாளர்கள் சிலர் காங்கிரசை விட்டு வெளியேறியதைச் சுட்டிக் காட்டி, கட்சிக்குள்ளே ஒழுங்கு நடவடிக்கை என்று இறங்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினால், அது காங்கிரசுக்குப் பலவீனமாகிவிடும் என்றும் சிலர் எச்சரித்தார்கள்.
நேருவுக்கு வேகத்தடையாக இருந்த வல்லபாய் படேலின் மரணம் அவருக்கு ஒரு சுதந்திரத்தை வழங்கினாலும், படேலின் ஆதரவாளர்களான வலதுசாரி சிந்தனை கொண்ட காங்கிரஸ்காரர்களைச் சமாளிக்கும் சவால் தொடர்ந்தது. இன்னொரு பக்கம், கட்சியில் இருந்த இடதுசாரி சிந்தனையாளர்கள் காங்கிரசை விட்டு வெளியேறித் தனிக்கட்சி தொடங்குவது என்பது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
Add Comment