131. தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம்
காமராஜ் “கிங் மேக்கர்” என அழைக்கப்பட்டதற்குக் காரணம், அவர் இந்திரா காந்தியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியதுதான் என்பது சரித்திரம். அதற்கான ஒரு பூர்வாங்க ஏற்பாடுதான் இந்த கே பிளான் என்பது அன்றைய அரசியல் விமர்சகர்கள் கருத்து.
நேருவின் சகாக்களான மூத்த காங்கிரஸ் தலைவர்களை ஓரம் கட்டிவிட்டால், நேருவுக்குப் பின் இந்திரா அரியணை ஏறுவது சுலபமாக இருக்கும் என நேருவும், இந்திராவும் கருதியதால் அவர்களின் மன ஓட்டத்தை அறிந்து காமராஜ் கொண்டு வந்தது இந்தத் திட்டம்.
இந்தத் திட்டத்தின் செயல்பாட்டில் முக்கிய பயனாளி இந்திராதான் என்பதால், அவரது பார்வைக்குப் போகாமல் காவு கொடுக்கப்படவிருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.
நேருவுக்கு மிக நெருக்கமாக இருந்த கிருஷ்ண மேனனின் ராஜினாமாவுக்குப் பிறகு, நேருவுக்கும், லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையிலான நெருக்கம் அதிகமானது. ஆனால், இந்திராவுக்கு, லால் பகதூர் சாஸ்திரியை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும் கூட, நேரு கே பிளான் பற்றி சாஸ்திரியிடம் பேசி இருக்கிறார்.
அதிகாரப்பூர்வமாக கே பிளான் அறிவிப்பினை அடுத்து, சாஸ்திரி தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். ஆனால், நேரு, சாஸ்திரி ராஜினாமாவை விரும்பவில்லை. காரணம், தன் மந்திரி சபையில் அவர் தொடர வேண்டும் என்று நேரு விரும்பினார்.
Add Comment