134. பிரதமர் சாஸ்திரி
நேருவுக்கு அடுத்து இந்தியப் பிரதமர் நாற்காலியில் சரியான ஒருவரை அமர்த்தும் பொறுப்பு காமராஜின் தோளில் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்குத் துளியும் வெறுப்பு ஏற்படாத வகையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க விரும்பினர், காமராஜும் இதர சின்டிகேட் தலைவர்களும்.
ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பதும் அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. காரணம், நேரு விட்டுச் சென்ற இடத்தில் அமர பல காங்கிரஸ் தலைவர்கள் துடித்தார்கள்.
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த தலைவர்களுக்கு கட்சிக்குள் ஆதரவு இல்லை; கட்சிக்குள்ளே ஆதரவு பெற்றிருந்தவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லை. இப்படி ஒரு சிக்கல்.
ஏற்கனவே கோஷ்டிப் பூசல்களுக்கு பேர் போன காங்கிரஸ் கட்சியில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளத் தக்க ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம் என நினைத்தார் காமராஜ்.
Add Comment