136. அண்டோனியா மைனோ
காஷ்மீரிலிருந்து இந்திரா காந்தி டெல்லி திரும்பியதும், பிரதமர் சாஸ்திரியை சந்தித்தார். காஷ்மீரில் இருந்த நாள்களில் தனது செயல்பாடுகளை எல்லாம் பெருமையோடு விளக்கினார்.
தொடர்ந்து இந்தப் போரில் இந்தியா எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறும் ஓர் அறிக்கையை அவரிடம் கொடுத்தார். இந்திரா காந்தியின் இந்த முந்திரிக்கொட்டைத்தனம் சாஸ்திரியை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது.
அந்த அறிக்கையைக் கையில் வாங்கிய சாஸ்திரி, “ இஸ்கா க்யா கரென்?” என்று கேட்டார். அதாவது, “இதை நான் என்ன செய்ய வேண்டும்?”
காரணம், இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அவர் காஷ்மீரில் இரண்டாவது தடவையாக வாலாட்டிய பாகிஸ்தானுக்கு, தக்க பதிலடி கொடுத்தார்.
பாகிஸ்தானிய துருப்புக்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி, அங்கிருந்த அரசைக் கவிழ்க்கும் முயற்சிகள் படு தோல்வி அடைந்ததால், அடுத்து, பாகிஸ்தான் இந்தியாவுடன் நேரடிப் போரில் இறங்கியது.
1965 ஆகஸ்ட் 5ஆம் தேதி துவங்கிய இந்தோ-பாக் போர் செப்டம்பர் 23 வரை நீடித்தது.
Add Comment