145. அதிகார சக்தி ஹக்ஸர்
நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்க சாஸ்திரி காலத்திலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போது பலன் தர ஆரம்பித்தன.
இந்திய விவசாய விஞ்ஞானிகளின் முன்னெடுப்பில் பசுமைப் புரட்சி ஏற்பட்டது. விவசாயத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு ஏற்பட்டது.
குறிப்பாக இதில் பஞ்சாப், ஹரியானா, உ.பி. ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருந்தன. வீரிய ரக நெல் மற்றும் கோதுமை உற்பத்தியால் உணவு உற்பத்தி பெருகியது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய விதைகள், உர வகைகள் வழங்கப்பட்டன. தேவையான மின்சாரம் வழங்கவும், நீர்ப் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கணிசமான உணவு உற்பத்திப் பெருக்கம் காரணமாக தேவைக்கு மிஞ்சியதை எதிர்காலத் தேவைக்கு அரசாங்கம் சேமித்து வைத்தது.
நாட்டில் இது போன்ற நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், மேற்கு வங்காளத்தில் நக்சலைட் பிரச்னை தலை தூக்கியது.
Add Comment