148. சஞ்சயின் பிடிவாதம்
1968 நவம்பர் 13ஆம் தேதி, பாராளுமன்றத்தில் இந்திரா காந்தியின் 22 வயதான இளைய மகன் சஞ்சய் காந்தி இந்தியாவுக்கு ஏற்ற சக்திவாய்ந்த சிறிய கார் தயாரிப்பதற்கான லைசென்ஸுக்கு மத்திய தொழில் வளர்ச்சித் துறைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஓர் அறிவிப்பு வெளியானது.
சஞ்சய் காந்தி தயாரிக்கவிருக்கும் காரின் விலை ஆறாயிரம் ரூபாய் என்றும் அது அதிகபட்சமாக மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் ஓடும் என்றும் ஒரு லிட்டருக்கு சுமார் 24 கி.மீ. மைலேஜ் கொடுக்கும் என்றும் சொன்னார்கள்.
பத்தாண்டுகளாக இந்திய அரசின் உயர் மட்டத்தில் மலிவு விலையில் “சாமானிய மக்கள் கார்” ஒன்றை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கருத்து இருந்து வந்தாலும், 1968ல்தான் தனியார்த் துறையிடம் அந்தப் பணியைக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
ரெனால்ட், டொயோட்டா, மாஸ்தா, மோரிஸ் உள்ளிட்ட 14 உலகளாவிய கார் உற்பத்தி நிறுவனங்கள் ஏறத்தாழ இந்த வகையான கார் தயாரிப்பதற்கான லைசென்ஸ் கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தன.
Add Comment