171. நெருக்கடி நிலையும் தமிழ்நாடும்
ராஜன் வழக்கு நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கேரளா சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கே மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கருணாகரனுக்கு இப்போது கேரளாவின் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார அதிர்ஷ்டம் அடித்தது.
ஆனாலும் அவருக்குப் போதாத காலம். அவர் சம்பந்தப்பட்ட ராஜன் வழக்கில் கேரள உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அவரைச் சம்மட்டியால் அடித்தது போலத் தீர்ப்பு வழங்கின.
போலிஸ் சித்ரவதையில் மரணமடைந்த ராஜனை உயிரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்துவது என்பது எப்படிச் சாத்தியம்? முடியைப் பிய்த்துக் கொண்டார்கள் கருணாகரனும், கேரள போலிஸ் உயர் அதிகாரிகளும். பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. கடைசியில், ஏப்ரல் 19ஆம் தேதி கேரள அரசு ‘ராஜனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை’ என்று தெரிவித்தது.














Add Comment