181. முக்தி வாஹினி
கிழக்கிலும், மேற்கிலும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் பதற்றம் அதிகரித்தது.
பிரதமர் இந்திரா காந்தியிடம் பத்திரிகையாளர்கள் எல்லைப்புறப் பதற்றத்தைக் குறிப்பிட்டு, ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூளுமா?’ என்று கேட்டார்கள்.
‘தெரியாது’ என்றார் இந்திரா காந்தி.
‘போரை இந்தியா எதிர்கொள்ளத் தயாராக உள்ளதா?’ என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், ‘ பொறுத்திருந்து பாருங்கள்!’
இதில் சுவாரசியமான ஒரு விஷயம் என்னவெனில், கி. பாகிஸ்தானின் சுதந்தரப் போராட்டத்துக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆதரவு அளித்தார்கள். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமெல்லாம் இல்லாமல் எல்லோரும் வங்காள மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். இந்தியா திரட்டிய அகதிகள் நிதிக்குப் பணமாகவும், உணவு உடைகளாகவும் வந்து குவிந்தன.















Add Comment