196. இந்திரா காந்தி கைது
உடல்நிலை காரணமாக ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயபிரகாஷ் நாராயண் பாட்னாவில் முடங்கிப் போய்விட, ஆட்சியில் அமர்ந்த ஜனதாக் கட்சித் தலைவர்கள் அதீத சுயநலம், கொள்கை வேறுபாடு எனப் பல விஷயங்களில் மோதிக் கொண்டாலும், இந்திரா காந்தி மீது வெறுப்பைக் காட்டுவதில் மட்டும் ஒற்றுமையாக இருந்தார்கள்.
இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துடியாய்த் துடித்தார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரும் இதற்கு உறுதுணையாக இருந்தார்கள். அதற்கு ஈடாகத் தங்களுக்கு நல்ல பதவி கிடைக்க ஜனதா ஆட்சியாளர்களோடு அவர்கள் பேரம் நடத்தினார்கள்.
ஜனதா ஆட்சியாளர்களும் காங்கிரஸ் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம், தவறுகளுக்கெல்லாம் சஞ்சய் காந்திதான் காரணம் என்று வாக்குமூலம் கொடுத்தால் அவர்கள் மீதான நடவடிக்கைகளை விட்டுவிடுவதாக ஆசை காட்டினார்கள்.
துரதிருஷ்டவசமாக ஜனதாவில் இருந்த எந்தத் தலைவருக்கும், அந்தக் கட்சிக்குள் நிலவிய உள்கட்சிப் பூசல்களை அடக்கக் கூடிய வல்லமை இருக்கவில்லை.















Add Comment