87. துண்டாடப்பட்ட இந்தியா
ராட்க்ளிஃப்ஃப் கமிஷன் முன்பாக கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்த முக்கிய சீக்கியப் பிரமுகர்கள் லாகூர் கிழக்குப் பஞ்சாபில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான காரணங்களையும், அவற்றுக்குரிய ஆதாரங்களையும், புள்ளி விபரங்களையும் சமர்ப்பித்தார்கள். ஆனால், க்ளிஃப், “ரொம்ப சகஜமாக, “அதெப்படி கல்கத்தா, லாகூர் ஆகிய இரண்டு முக்கியமான பெரிய நகரங்களையும் இந்தியாவுக்குத் தரமுடியும்?” என்று கேட்டார். அவரது பாகிஸ்தான் சாய்வு நிலைப்பாட்டுக்கு இதுபோல ஏராளமான உதாரணங்கள் கூறலாம்.
லாகூருடன் சேர்த்து, இலவச இணைப்பாக உலகின் மிகச் சிறந்தவற்றுடன் ஒப்பிடத் தக்க பாசனக் கால்வாய்கள், ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் வசமிருந்த செழிப்பான கோதுமை வயல்கள், நானகானா சாஹேப் உள்ளிட்ட பல முக்கிய சீக்கிய புனிதத் தலங்கள் என பல பாகிஸ்தானுக்கு வாரி வழங்கப்பட்டன.
Add Comment