50. தடியடித் தாக்குதல்
லாகூர் வந்த சைமன் கமிஷன் உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ரயில் நிலையத்தில் கூடியவர்கள் மத்தியில் லாலா லஜபத் ராய் உரையாற்றும்போது, தடியடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ.ஸ்காட், தானே களத்தில் இறங்கி, லஜபத் ராயைத் தாக்கினார். நெஞ்சில் தாக்கப்பட்ட லஜபத் ராய் பலத்த காயமடைந்தார். சிகிச்சை பலனின்றி 17 நவம்பர் 1928-இல் மரணத்தைத் தழுவினார்.
ஜேம்ஸ் ஸ்காட்டின் தாக்குதல் லஜபத் ராயின் மரணத்துக்கு முக்கியக் காரணம் என்று மக்கள் மத்தியிலொரு கருத்து நிலவியது. எனவே, அவருடைய மரணம், தேச பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. சைமன் கமிஷன் புறக்கணிப்பினை மக்கள் மேலும் தீவிரப்படுத்தினார்கள். அதற்கு எதிர்வினை இல்லாமல் இருக்குமா? பிரிட்டிஷ் அரசாங்கமும், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்குத் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது.
Add Comment