Home » ஒரு  குடும்பக்  கதை – 90
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 90

90. தற்காலிக கவர்னர் ஜெனரல்

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம்  இன்றைய அரபு நாட்டு  சுல்தான்களைப் போல உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பாக ஜூன் 11ஆம் தேதி, நிஜாம் “ஹைதராபாத் இந்தியாவுடன் இணையாது; தனிப்பட்ட சுதந்திர நாடாக இருக்கும்” என்று ஓர் அறிக்கை வெளியிட்டார். ஹைதராபாத் பகுதியில் 85% மக்கள் இந்துக்கள் என்பதும்,  ஆனால் அரசாங்க உத்தியோகங்கள், ராணுவம், போலிஸ் ஆகியவற்றில் முஸ்லிம்களே ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதேசி சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டபோது, ஹைதராபாத் நிஜாம் ஓராண்டு கால அவகாசம் கேட்டு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். இதற்கிடையில்  தெலங்கானா பிரதேசத்தில் நிலவிய நிலப் பிரபுத்துவ அதிகாரத்துக்கு  எதிராக விவசாயிகள்  போராட்டத்தில் குதித்தார்கள். இதற்கு ‘தெலங்கானா சாயுதப் போராட்டம்’ என்று பெயர். 1944-ல் துவங்கிய இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட்களின் தலைமையில், நிஜாமுக்கு எதிராக நடந்து வந்தது. இந்திய சுதந்திரத்தையடுத்து, நிஜாம் சுதந்திர நாடாக இருக்க முற்பட்ட சூழ்நிலையில் போராட்டம் தீவிரமடைந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!