Home » தடையே இல்லாக் காட்டாறு: தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு
கணினி

தடையே இல்லாக் காட்டாறு: தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு

தமிழ் மென்பொருள்கள், மெய்நிகர் வளங்கள், கருவிகள் உள்ளிட்டவை அனைவருக்கும் கட்டற்ற முறையில் (ஓபன் சோர்ஸ்) கிடைக்கவேண்டும். இதுதான் கணியம் அறக்கட்டளையின் நோக்கம். இந்த அறக்கட்டளை பிற குழுக்களுடன் இணைந்து கட்டற்ற மென்பொருள் மாநாட்டை நடத்தவிருக்கிறது. சென்னையில் ஜூலை 18,19ஆம் தேதிகளில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாநாட்டு ஏற்பாடுகளைக் குறித்து கணியம் அறக்கட்டளைக் குழுவினருடன் பேசினோம். முதலில் பேசிய சீனிவாசன், கட்டற்ற மென்பொருள்களின் பயன்கள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘லினக்ஸ் பயனர்கள் குழுவின் கலந்துரையாடல் கூட்டங்கள்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தன. எங்கள் குழுவில் இருக்கும் ஓபன் சோர்ஸ் ஆர்வலர்கள் முழுநேர, பகுதிநேரப் பணியாளர்களாக இதில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு முன்பிருந்தவர்கள் இதைச் செய்தார்கள். அவர்களைப் பின்பற்றி நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இதை ஒருவகையில் ரசிகர் மன்றங்களைப் போல என்று கூடச் சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் பிடித்ததை அவரவர்கள் செய்கிறார்கள். எங்களுக்கு விருப்பமானதை நாங்கள் பிறருடன் பகிர்ந்துகொள்கிறோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!