19. அமன நிலை
மீண்டும் குழந்தையாக மாறுவதே தியானம் – ஓஷோ
“மனிதன் சிரிக்கத் தெரிந்த மிருகமா..? கடவுளை நான் சிரிப்பு வடிவில் தான் காண்கிறேன். வேறு எந்தத் தியான நிலையிலும் அவனைக் காண விரும்பவில்லை. இருபத்து நான்கு மணி நேரமும் சிரித்த நிலையில் இருப்பவனைதான் நான் கடவுள் என்று கூறுவேன். கடவுள் மனித குலத்தை இடைவிடாது கவனித்துக் கொண்டு இருப்பான். இங்கே எத்தனை விதமான காமெடிகள் அரங்கேறுகின்றன என்று தினமும் அவன் பார்ப்பதனால் அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டே இருப்பான். நீட்ஷே கடவுள் இறந்து விட்டதாகக் கூறினார். அவரை யார் கொலை செய்தது..? அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று கேள்விகள் எழலாம். எனக்கென்னவோ அவர் சிரித்துத் சிரித்தே பட்டென்று செத்துப் போய் விட்டார் என்று தோன்றுகிறது. பாவம், அந்தக் கடவுள் மீது உங்களுக்கு அனுதாபம் ஏற்பட வேண்டும். உங்கள் கேலிக் கூத்துகளால் அவர் உயிரை விட்டு விட்டார்” என்று ஓஷோ கூறுகிறார்.
Add Comment