Home » மக்களவைத் தேர்தலும் மைக்கேல்,மதன,காம,ராஜன்களும்
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலும் மைக்கேல்,மதன,காம,ராஜன்களும்

“இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டம் எழுச்சியுற்று எங்கள் கூட்டணியை வெற்றியடைய வைக்க இருக்கின்றனர். எங்களுக்குப் போட்டி என்று நினைக்கும் எதிர்க்கட்சியினர், எதிரணியினர் அனைவரும் ஓடி ஒளிவது உறுதி” என்று முழங்கினார் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சையாகக் களம் இறங்கும் ஓ பன்னீர்செல்வம். இருபது கார்கள், நூற்றுக்கணக்கானத் தொண்டர்கள் எனக் கூட்டம் கூட்டி கடந்த 25-ஆம் தேதி மனுவைத் தாக்கல் செய்த ஓ.பி.எஸ். அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் தான் எதிர்கொள்ள இருக்கும் வினோதமான சூழலை அறியாமல் சொன்ன சொற்கள் அவை.

பாராளுமன்றத் தேர்தல் வந்தாலும் வந்தது. இன்றைய அரசியல்வாதிகளின் வியூகங்கள் ஆச்சரியப்பட வைப்பதோடு சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கின்றன. கொள்கைகள், சேவைகள், சாதனைகள் போன்றவற்றைச் சொல்லி வாக்குச் சேகரிக்கலாம், ஜெயிக்கலாம் என்பதைவிடச் சில வினோதமான முறைகளை அவர்கள் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதைவிட எதிரி ஜெயித்துவிடக் கூடாது என்பதே அவர்கள் பிரதான குறிக்கோள். அதற்காக எந்தவிதமான குடைச்சல் கொடுக்கவும் எதிரணியினர் தயாராக இருக்கின்றனர். அதுபோன்ற ஒரு இடியாப்பச் சிக்கலைத்தான் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Muthu Nagaraj says:

    தென்காசியில் அமமுக சார்பில் ஒரு பொண்ணுத்தாய் சென்ற தேர்தலில் போட்டியிட்டார். இவரைக்குளப்ப 4 பொண்ணுத்தாய்மார்கள் தோன்றினர். கர்நாடகத்தில் பேர் பெற்ற சுமலதா அம்பரீஸை குளப்ப மசாஜத கட்சி சுமலதாக்களை சுயேட்சைகளாக இரக்கியது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!