தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை அணைத்துக்கொண்டிருக்கும் நாடு பெரு. இங்கே லட்சத்துக்கும் அதிகமான தொல்லியல் களங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கீழடி போல இங்கே தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆய்வில், நாலாயிரம் வருடங்கள் பழமையான முப்பரிமாண வண்ணச் சுவரோவியம் ஒன்றைச் சென்ற வாரம் கண்டுபிடித்துள்ளனர்.
லா லிபெர்டாட் பகுதியில் உள்ள ஹுவாகா யோலாண்டா என்ற நகரில் இந்தச் சுவரோவியம் கண்டறியப் பட்டுள்ளது. மூன்றடி உயரம், ஆறடி நீளம். சுவருக்கு நடுவில் கழுகு போன்ற பறவை, அகண்டச் சிறகுகளை இரண்டு பக்கமும் விரித்து நிற்கிறது. அதன் தலையில் வைர வடிவில் அலங்காரம். மேலும் அழகு சேர்க்க நீலம், மஞ்சள், சிகப்பு, கருப்பு போன்ற பல வண்ணங்கள் இதன் மேல் தீட்டப்பட்டுள்ளன. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்டிய வண்ண நிறங்கள் மண்ணுக்குள் புதைந்தபின்னும் இன்றும் அழியாமல் இருக்கின்றன என்பது இதன் தனிச்சிறப்பு. இந்தச் சுவரோவியம் தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.














Add Comment