நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்த ஆண்டும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோடை விடுமுறைக் காலத்தில் மட்டும் இந்த நடைமுறை இருக்கிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரை செயலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பையும் உள்ளூர்வாசிகள் இடையே எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் (இவை நான்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன) கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) போன்றவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், தென்னிந்தியாவின் தட்பவெப்பச் சமநிலை, மழைப்பொழிவு, ஆறுகள் உற்பத்தி போன்ற பல சூழியல் உயிர்க்கண்ணிகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது. ஆசிய யானை இனத்தைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் யானைகளுக்கும் பல அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் புகலிடமாக உள்ள இதில் பந்திப்பூர், ஆனைமலை, முதுமலை போன்ற புலிகள் காப்பகங்களும் இருக்கின்றன.
Add Comment