Home » பனிப் புயல் -1
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் -1

ஒரு முடிவும் இன்னொரு ஆரம்பமும்

31-டிச-1999

மாஸ்கோ.

ஒரு புதிய நூற்றாண்டில் நுழைய ஆவலுடன் காத்திருந்தது உலகம். ரஷ்ய மக்களும் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். சோவியத் நாடுகள் பிரிந்த பின்னும் ரஷ்யா என்று பெயர் மாறியதே தவிர மக்களின் நிலை மாறவில்லை. ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸின் தொலைக்காட்சியில் தோன்றி புத்தாண்டு உரை நிகழ்த்துவார். பிறகு நாடெங்கும் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கும். இதுதான் வழக்கமாக இருந்தது. அன்றும் அதிபரின் உரை தொடங்கியது.

வழக்கமான அலங்காரங்களுடன் கிறிஸ்துமஸ் மரம். இருபுறமும் கொடிகள். ரஷ்ய தேசியக் கொடியும், அதிபரின் முத்திரை கொண்ட பாரம்பரியக் கொடியும். ஆனால் இருக்கையில் அமர்ந்திருந்தவர் அதிபர் எல்ஸின் அல்ல. கொழுகொழுவெனப் படிய வாரிய வெள்ளை முடியுடன், சிரித்தால் கண்களையே மறைத்துவிடும் கன்னங்களுடைய எல்ஸின் அந்த உரையை ஆற்றவில்லை. புதிதாக ஒருவர் உரையாற்றினார்.

ஒல்லியான தேகம். அதற்குப் பொருத்தமாக நீளவாக்கில் முகம். முன்நெற்றி வழுக்கையுடன் பொன்னிறத்தில் அடர்த்தியற்ற முடி. வழுக்கையால் நெற்றி மட்டும் கொஞ்சம் பரந்திருந்தது. நீளமான மூக்கின் கீழ் கொஞ்சம் இடைவெளி விட்டு கோடு போட்டது போல உதடுகள். அளவெடுத்து வரைந்தது போலிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!