13 – தாதாவுக்கு உருவான குறிக்கோள்
ஆறாவது வகுப்பில் வலோத்யாவுக்கு நடைமுறை உண்மைகள் புரியத் தொடங்கின. ஒல்லியாக, குள்ளமாக இருந்ததால் அவனை வகுப்பிலும் முற்றத்திலும் வம்பிழுத்தார்கள். அவன் முற்றத்து தாதா என்பதில் சந்தேகமில்லை. அடிப்பதற்கு அவன் யோசித்ததே இல்லை.
எதிரிலிருப்பவன் மீது பாய்ந்து அவனைக் கீறுவது, கடிப்பது, முடியைக் கொத்தாகப் பிடித்து இழுப்பது என்று தன்னைக் காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வான். சண்டை என்று வந்துவிட்டால் வெறி பிடித்தவன் போலாகி விடுவான். எதிரியின் பலம் கண்டு அவன் பயந்ததில்லை. வகுப்பில் நிறைய பலசாலிகள் இருந்தும், அவனோடு சண்டையிட்டு யாரும் ஜெயிக்க முடிந்ததில்லை.
அவனுடைய இந்தத் துடுக்குத்தனத்தை வகுப்பிலிருந்த அனைவரும் ரசித்தார்கள். நண்பர்களை விட்டுக்கொடுக்காத வலோத்யாவின் துணிவு, அவன் மேல் தனி மரியாதையை ஏற்படுத்தியது. என்னதான் வெறிபிடித்தவனாகச் சண்டை போட்டாலும், தேவைப்படும் நேரங்களில் விவேகத்துடன் பொறுமை காக்கவும் அவனுக்குத் தெரிந்திருந்தது.














Add Comment