Home » பனிப் புயல் – 23
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 23

23 – ஒயினை ஏமாற்றிய பாவம்

கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களிலேயே சம்பா மற்றும் ஜூடோ தற்காப்புக் கலைகளில் மாஸ்டர் பட்டம் வாங்கிவிட்டார் வலோத்யா. படிப்போடு, இவற்றுக்கான கடினப் பயிற்சிகளையும் விடவில்லை. ஒவ்வொரு முறையும் போட்டிக்குத் தயாராவதே ஒரு கொடுங்கனவைப் போன்றது.

நகருக்கு வெளியே அமைந்திருந்த பதினேழு கிமீ அகல ஏரியைச் சுற்றிய ஓட்டத்துடன் அன்றைய நாள் ஆரம்பமாகும். அதன் பிறகு உடற்பயிற்சி. அதைத் தொடர்ந்து ஜூடோ போட்டிக்கான பயிற்சி. காலைச் சிற்றுண்டி, மதிய உணவுக்கென சிறிய இடைவேளைகள் இருக்கும். மதிய ஓய்வுக்குப் பிறகு இரவு வரை பயிற்சி தொடரும். நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்க வார இறுதியில் பயணம் செய்ய வேண்டும். அங்கும் அதே அட்டவணை தொடரும்.

ஒருமுறை போட்டிக்காக மால்டாவியா சென்றிருந்தார் வலோத்யா. உலகின் பழமையான ஒயின் தயாரிப்புகளுக்குப் பெயர்போன பகுதி அது. நமது தெருக்களில் தக்காளியைக் கூடை கூடையாகக் கொட்டி விற்பனை செய்வதுபோல அங்கு ஒயின் வியாபாரம் நடந்தது. அந்நகரின் தாங்க முடியாத வெப்பத்தைத் தணிக்க, ஆளுக்கொரு ஒயின் பாட்டிலில் சரணடையலாம் என்று வலோத்யாவும் அவரது நண்பரும் நினைத்தார்கள். ஒயினும், அதன்பின் ஓய்வும் என்று முடிவானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!