Home » பனிப் புயல் – 30
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 30

30 – நூதனக் கொலைகளின் ஆரம்பம்

01-நவம்பர்-2006.
மில்லினியம் உணவகம்,
லண்டன்.

அலெக்சாண்டர் லித்வினியன்காவுக்கு பிரிட்டனின் குடியுரிமை கிடைத்துவிட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யாவிலிருந்து தப்பித்து வந்தவர். இனி ரஷ்யா தன்னை கைது செய்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை. ஏற்கெனவே திட்டமிட்டிருந்த வர்த்தகச் சந்திப்பை முடித்துவிட்டு மனைவியுடன் இந்நாளைக் கொண்டாடக் காத்திருந்தார்.

மாஸ்கோவிலிருந்து அவரைச் சந்திக்க வந்திருந்த அந்த்ரேய் லூகவோய் உணவகத்துக்குள் காத்திருந்தார். உதவியாளர் திமித்ரி கோஃப்தூனும் உடனிருந்தார். மேசையில் ஒரு வெள்ளை செராமிக் தேநீர் கெண்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்களுடன் வர்த்தகத் திட்டங்களை விவாதித்தார் லித்வினியன்கா. அந்தத் தேநீர் கெண்டியிலிருந்து க்ரீன் டீ ஊற்றிக் கொடுத்து அவரை உபசரித்தார்கள். சந்திப்பு முடிந்ததும் மனைவியுடன் வீட்டில் சிறப்பு விருந்தைக் கொண்டாடினார்.

நள்ளிரவு உறங்கச் சென்றவரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. ‘நாம் இருவரும் சேர்ந்தல்லவா உணவருந்தினோம்? எனக்கு ஒன்றும் ஆகவில்லை, உங்களுக்கு ஏன் ஒத்துக்கொள்ளவில்லை? நீங்கள் வெளியில் ஏதாவது உண்டீர்களா?’ என்று கேட்டார் அவரது மனைவி. மாலையில் க்ரீன் டீ குடித்ததை லித்வினியன்கா நினைவுகூர்ந்துச் சொன்னார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!