Home » ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக் குரல்கள்
உலகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக் குரல்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 38 கோரிக்கைகளில், 25 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜம்மு காஷ்மீர் ஜாயிண்ட் அவாமி ஆக்‌ஷன் கமிட்டிக்கும் (JKJAAC) இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் ஒரு பகுதி. இது 1947ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LoC) மேற்கே அமைந்துள்ள இந்த நிலப்பரப்பு, ஆசாத் காஷ்மீர், கில்ஜித்-பால்டிஸ்தான் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியா இந்தப் பகுதியை பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வப் பிரதேசமாக அங்கீகரிக்கவில்லை.

1949ஆம் ஆண்டு கராச்சி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தக் கோடு (Cease-Fire Line) தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, அப்போதைய AJK தலைவர் சர்தார் இப்ராஹிம் கான், முஸ்லீம் கான்ஃபரன்ஸ் தலைவர் சௌத்ரி குலாம் அப்பாஸ் இருவரும் அந்தப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்தனர். இதுவே ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இரண்டாகப் பிரித்த முதல் அதிகாரப்பூர்வ நிகழ்வு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!