“டெய்லி இட்லி, தோசை, இல்லன்னா உப்புமா. வீக்கெண்ட் வந்தா பூரி, சப்பாத்தி. போரடிக்குது அத்தாட்டி. ஏதாவது புதுசா டிரை பண்ணலாம்னா இவருக்கு, பசங்களுக்குப் பிடிக்குமான்னு யோசனையாயிருக்கு. கஷ்டப்பட்டு பண்ணி வேஸ்டாகிடுச்சுன்னா என்ன பண்றது?” ஊரிலிருந்து வந்திருந்த அத்தைப் பாட்டியிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். சமையல் கலை சரஸ்வதியான அவர் ஏதாவது புது அயிட்டம் செய்து தருவார் என்கிற நம்பிக்கையில்.
“டிஃபன்னா இட்லி தோசைதான். வேற என்ன செய்ய முடியும்? புளிப்பொங்கல் வேணா பண்ணுவோமா?”
“பண்ணலாம் பண்ணலாம். எப்படிப் பண்றது? அதுக்கு என்னென்ன தேவை?”
“பெருசா ஒண்ணுமே இல்லை. ரொம்ப சுலபம். அரிசியை உடைச்சுப் போட வேண்டியதுதான். நானே செஞ்சு நாள் ஆச்சு.”
sema super. tempting while reading . wanna give a try..wishing to get such a patti 😊