இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் பேரன் ராகுல் காந்தியின் வயது 14. அடுத்த ஆறு ஆண்டுகளில் ராஜிவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார். இருபது வயது இளைஞன் ராகுலுக்கு இருந்தது இரண்டு வாய்ப்புகள். தன் அன்புக்குரிய பாட்டியையும் தந்தையும் இழக்கக் காரணமான, தனக்கும் தன் தாய்க்கும் விருப்பமில்லாத அரசியலை விட்டு வெகுதூரம் விலகிக் கல்யாணம், குழந்தை, குடும்பம் என்று ஒரு வாழ்க்கையை வாழ்வது. அல்லது என்றேனும் ஒருநாள் தான் அரசியல் பொறுப்புகளை ஏற்கத்தான் வேண்டும் என்று புரிதலுடன் அதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வது. இந்த இரண்டில் என்ன செய்யலாம் என்று முடிவு செய்ய ராகுல் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டார். அப்போது சென்றிருக்க வேண்டிய பாதயாத்திரையை மேலும் இருபதாண்டுகள் தாமதித்து இப்போது நடந்துகொண்டிருக்கிறார். ராகுல் தலைவனாக உருவாகாமல் போகக் காரணம், பப்பு என்று அவரை அழைக்கும் பா,ஜ,க,வினர் அல்ல, ராகுல்தான்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
சிறந்த கட்டுரை. தெளிவு. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
ஒரு நல்ல தெளிவான கட்டுரை