ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் 191ஆவது பிறந்த நாள் (திதி பூஜா) பிப்ரவரி 19ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான கொண்டாட்டங்கள் கொல்கத்தாவிலுள்ள பேளூர் மடத்தில் காலை 4.30 மணி முதல் தொடங்குகின்றன. வேத பாராயணம், சங்கீதம், சொற்பொழிவுகள், சமயக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பொதுமக்களுக்கான கொண்டாட்டங்கள் 22ஆம் தேதி நடைபெறும்.
‘கர்வம்தான் அழிவுக்கு ஆரம்பம். நடப்பது அனைத்தையும் கடவுளிடம் விட்டு விடவேண்டும். அதன்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அனைவருக்குள்ளும் கடவுள் உறைந்திருக்கிறார். அதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். சக மனிதருக்கு உதவுதே கடவுள் பணி என்று கருத வேண்டும். வாழும் காலம் முழுதும் கடவுளின் தேடலை மனிதர்கள் கைவிடவே கூடாது’ என்றார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
18.02.1836 அன்று வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள காமர்புகூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் கதாதர் சட்டோபாத்யாய். அதுதான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் இயற்பெயர். அவருடைய பெற்றோரான க்ஷுதிராம் சட்டோபாத்யாய், சந்திரமணி தேவி இருவரும் ஆழ்ந்த இறைப் பற்றுள்ளவர்கள். பக்தியுள்ளவர்கள் என்றும் வறுமையில் வாடுவது இயல்பு தானே? வறுமையின் கொடிய பிடியில் தான் இவர்களும் இருந்தனர். கதாதருக்கு இளமையில் இருந்தே பள்ளிக் கல்வியில் ஆர்வம் இல்லை. உலக அனுபவம், கடவுள் சேவை இவை மட்டுமே முக்கியம் என்று கருதினார்.















Add Comment