Home » நான்கு குறுங்கதைகள் – பா. ரேவதி
குறுங்கதைகள்

நான்கு குறுங்கதைகள் – பா. ரேவதி

1

எங்கள் வீட்டு கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதை சொல்லும்.
ஒரு புகைப்படத்தில் தாத்தா மொத்த உலகத்தோடும் விரோதம் கொண்டவர் போல் முறைத்தபடி இருப்பார் . அருகில் முதுகைச் சுற்றி போர்த்திய முந்தானையும் இடுப்பில் கொத்துச்சாவியுமாக நிற்கும் பாட்டிக்கு ஓர் அரசியின் தோரணை. ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற பெரியப்பா தனியாக நிற்கும் புகைப்படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் ராணுவம் தெரியும் .

இன்னொன்றில் அப்பா நாற்காலியில் அமர்ந்திருக்க உள்ளான் குருவியின் மருண்ட கீழ்பார்வையுடன் அம்மா அருகில் நின்றிருப்பாள். அவளது மூக்குத்தியின்மேல் பட்டுத் தெறிக்கும் ஒளியினால் மின்னும் கன்னம் அவளை ஓர் ஓவியமாக்கி காட்டும் .

எல்லாவற்றையும்விட என்னை அதிகம் கவர்வது நான் பார்த்தேயிராத கொள்ளுதாத்தாவின் புகைப்படம்தான். அவர் இறந்தபின் நாற்காலியில் அமரவைத்துக் கட்டி எடுத்த அந்தப் புகைப்படம் அத்தனை உயிரோட்டத்துடன் இருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!