ரோபோ என்றால் நம் நினைவுக்கு வருவது இயந்திர மனிதன். இரண்டு கைகள், இரண்டு கால்கள், ஒரு தலை. மனித உருவை ஒத்திருக்கும் இயந்திரம். ஆனால் ஒரு ரோபோ என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. பலதரப்பட்ட ரோபோக்கள் உள்ளன.
ரோபோக்கள் எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் உருவாக்கப்படப் போகும் இயந்திரங்கள் அல்ல. இன்றைக்கே ரோபோக்கள் இருக்கின்றன. பல்வேறு தொழிற்சாலை சார்ந்த செயல்பாடுகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாகக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் உதிரிப் பாகங்களை ஒன்றிணைக்கும் பணியை ரோபோக்கள் செய்கின்றன. கார் மட்டுமன்றி, பல்வேறு வகையான கருவிகளைத் தயாரிக்கும் அசெம்பிளி லைன்களில் ரோபோக்கள் உதவுகின்றன.
இவ்வாறான ரோபோக்கள் பெருமளவில் பரவலாகி வருகின்றன. ரோபோட்டிக்ஸ் துறை இன்னும் சில வருடங்களில் இருநூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் புழங்கும் மாபெரும் துறையாக வளரும் என்கின்றனர்.
Add Comment