33 அழைப்பு
இரவு படுக்க, காந்தி பவனுக்கு வந்தபோது, அமைதியான சுதீருடன் எல்லாவற்றையும் கிண்டலடித்துக்கொண்டு எகத்தாளமாகப் பேசும் நாயரைப் பார்க்க சற்று வியப்பாக இருந்தது. சுதீருடன் எப்போதும் இருக்கிற ஜோஷி அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதைப்போல சுவரோரம் சாய்ந்துகொண்டு எதையோ படித்துக்கொண்டிருந்தான். பாதி தெரிந்த அட்டையில் கண்ணாடி அணிந்த படம் பாதி தெரிந்தது. என்னதான் மெல்லிய புத்தகமாக இருந்தாலும் அதற்காக இப்படியா புத்தகத்தை சுருட்டாத குறையாக வைத்துக்கொண்டு படிப்பது. என்ன ரசனையோ என நினைத்துக்கொண்டிருக்கையில்,
‘வாட் நர்ஸி நாட் ஸீன் தி ஹோல் டே‘ என்றான் சுதீர்.
நாயர் ‘மைட் ஹேவ் கான் வித் சம் ச்சிக்‘ என்றதும் தூக்கிவாரிப்போட்டது.
‘டிட் யு ஸீ‘ என்றான் பரபரப்பாக.














Add Comment