41 மண்ணும் மனிதர்களும்
‘சுதீர் – சுதீர்’ என்று இருவரையும் அறிமுகப்படுத்திவைத்தான்.
அச்சா என்று சிரித்தபடி கைகொடுத்தான் சுதீர் ரவுத்.
சுதீரிடம், ‘என் பெயர் சி ஆர் சுதீந்தர். வீட்டில் அழைப்பது சுதீர்’ என்றான் இவனுடைய பெரியப்பா பையன்.
பெரியப்பா பையன் என்று அவனைச் சொல்வது இவனுக்கே புதிதாக இருந்தது. கசின் என்று சொல்வது, பழக்கமின்மை காரணமாக வித்தியாசமாகவும் அந்நியமாகவும் இருந்ததால் எல்லோரையும்போல எடுத்ததும் அப்படிச் சொல்ல வரவில்லை.














Add Comment