15 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் கொழுப்பு, சத்தே இல்லாத மைதா மாவு, உருளைக்கிழங்கோ, காய்கறியோ சேர்த்திருந்தால் 4 கிராம் புரதம் அல்லது நார்ச்சத்து. எல்லாம் சேர்த்து மொத்தம் 200 கிகலோரிகளைக் கொண்ட உணவுப்பொருள். இதைப் பின்வருமாறும் சொல்லலாம்.
‘முக்கோணத்தில் ஒரு கோணத்தின் மொறுமொறுவென இருக்கும் மேல்பகுதியைக் கடித்தவுடன் உள்ளிருக்கும் ஆவி வெளியேறுவதைப் பார்ப்பீர்கள். சப்பாத்தியை உப்பு வத்தலாகப் போட்டது போன்றதொரு சுவை நாக்கில் தெரியும். மென்று விழுங்கி விடுங்கள். கடிக்கக் கடிக்க இதே சுவை தொடரும். ஆனால் மொறுமொறுப்புக் குறைந்து பல்லுக்கு இதமாக இருக்கும். ஆவி அடங்கி ருசித்துச் சாப்பிடுமளவு சூடு தணிந்திருக்கும்.
இனி காத்திருப்பது அந்த அதிருசிப் புதையல். உங்கள் அடுத்த கடியில் மசித்த உருளைக்கிழங்குடன் வெங்காயமும் மசாலாவும் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர். இந்த கரம் மசாலா சுவையைச் சைவமாக்க, மெதுமெதுவென வெந்த பச்சைப் பட்டாணித் தட்டுப்படுமானால் உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம். முதலில் இதை மட்டும் தனியாக அனுபவியுங்கள்.













Add Comment