ஓட்டுக்குப் பணம் வாங்காமல் ‘நேர்மையாக வாக்களிப்போம்’ என்னும் பிரசாரத்தை முன் வைத்து கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கோவையிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர். இவர்களில் இருவர் ஆண்கள். நான்கு பேர் பெண்கள். பதினெட்டு நாள்களில் நாநூறு கிலோமீட்டர்கள் நடைப்பயணம் செய்துள்ளார்கள். இந்தப் பயணத்தில் ஒருநாள் கூட விடுதியில் தங்கவில்லை. உணவகங்களில் உண்ணவில்லை. உணவு, தண்ணீர் போன்றவற்றை பொதுமக்கள் வழங்கியுள்ளனர். கோயில், மண்டபம், பொதுமக்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
கோபி கலை அறிவியல் கல்லூரி, கோவை, திருவண்ணாமலை சட்டக் கல்லூரி, திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இவர்கள். பயணம் கற்றுத் தருவதை வேறு எதுவும் கற்றுக் கொடுக்காது. சமூக, குடும்ப, வாழ்க்கைக்குள் நுழையாத கல்லூரி மாணவர்கள் இணைந்து ஒரு நெடும் பயணம் மேற்கொண்டது அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும். அனுபவங்கள் கிடைத்திருக்கும்.
இந்தப் பயணம் குறித்து முனை அமைப்பின் தலைவரும், நடைப்பயணத்துக்குத் தலைமை தாங்கியவருமான மாணவர் சிபியிடம் பேசினோம்.
Add Comment