Home » அறிவியல் நோபல் பரிசுகள் 2025
விருது

அறிவியல் நோபல் பரிசுகள் 2025

இயற்பியல், வேதியியலில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலோகக் கரிமச் சட்டக ஆராய்ச்சிகளில் முக்கியப் பங்காற்றிய மூன்று வேதியியலாளர்களுக்கு விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இயற்பியலிலும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் விருதைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். குவாண்டம் ஊடுருவல் ஆராய்ச்சிக்காக இயற்பியல் நோபல் வழங்கப்பட்டுள்ளது.

உலோகக் கரிமச் சட்டகத்தை ஆங்கிலத்தில் Metal Organic Framework என்றழைப்பார்கள். சுருக்கமாக MOF. இதை விளக்க, ஒரு கனசதுரத்தை மனத்தில் எண்ணிக்கொள்ளுங்கள். அதன் எட்டு முனைகளும் உலோகத்தால் ஆனவை. அந்த முனைகள், சங்கிலி போன்ற கரிம மூலக்கூறுகளால் இணைக்கப்படுகின்றன. அதாவது, கனசதுரத்தின் பன்னிரண்டு விளிம்புகளும் கரிம மூலக்கூறுகளால் ஆனவை. ஓர் உதாரணத்துக்குத்தான் கனசதுரத்தை எடுத்துக்கொண்டோம். மற்றபடி, இந்தச் சட்டகங்கள் உருளை, கனச்செவ்வகம் என எந்த வடிவிலும் இருக்கலாம்.

ஒவ்வொரு சட்டகமும் தொடர்ச்சியாக இணைந்து ஒரு நெட்வொர்க்கைக் கட்டமைக்கின்றன. இதுபோன்ற பலபடி வடிவங்கள், பெரு மூலக்கூறுகள் எனப்படும் மேக்ரோ மூலக்கூறுகள் என்ற வகைப்பாட்டுக்குள் வருகின்றன. MOFகளின் உள்புறம் காலியாக இருப்பதால் இவை பஞ்சு போன்ற அமைப்பினைப் பெறுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!